LATEST NEWS
பக்தர்களே அலர்ட்..! இனி கோவிலுக்குள் ரீல்ஸ், செல்பி எடுத்தா அவ்ளோதான்… விஐபி-க்கள், சினிமா பிரபலங்களுக்கும் நோ என்ட்ரி…! அறநிலையத்துறை போட்ட புது ரூல்ஸ்…! தப்பினால் அதிகாரிகள் மீதும் ஆக்ஷன்..!!
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுப்பதாகவும், ரீல்ஸ் போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் புகார்கள் வந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பிற பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதுடன், புனிதத்தன்மையும் பாதிக்கப்படுவதாகக் கூறி, செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வது முழுமையாகத் தடை செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் அருகே பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களிடம் இருந்து செல்போனைப் பெற்று வைக்க ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட உள்ளது. ஒலிபெருக்கி மூலமாகவும், அறிவிப்பு பலகைகள் மூலமாகவும் இத்தடை குறித்து அறிவிக்கப்பட உள்ளது. விதிகளை மீறி புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறுகள் தொடர்ந்தால் பொறுப்பான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கோவிலுக்குள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் கோவிலுக்கு வந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது பக்தர்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையிலும், மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்காத வகையிலும் இந்த நடைமுறைகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.
