LATEST NEWS
பகீர்.. டாய்லெட்டில் கேட்ட விசித்திர சீறும் சத்தம்… சந்தேகப்பட்டு கமோடை உடைத்து பார்த்த குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! குருகிராமில் நடந்த நடுங்கவைக்கும் சம்பவம்..!!
ஹரியானா மாநிலம் குருகிராமின் காடௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறைக்குள் தொடர்ந்து சீறும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுப் பதற்றமடைந்த குடும்பத்தினர், சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தேடியும் பாம்பு தென்படாததால், உடனடியாக வனவிலங்கு பாதுகாப்புப் பணியாளரான அனில் கண்டாஸுக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கழிப்பறை இருக்கையைத் தட்டிப் பார்த்தபோது, சீறும் சத்தம் மேலும் அதிகரித்தது.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாகக் கழிப்பறை இருக்கையை உடைத்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இருக்கை உடைக்கப்பட்ட போது, அதன் குறுகிய அடியில் சுமார் 6 அடி நீளமுள்ள மிகவும் விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த நாகப்பாம்பைப் பாதுகாப்பாக மீட்டு, குடியிருப்புப் பகுதியிலிருந்து தொலைவில் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.
நகரமயமாக்கல் மற்றும் தொடர்ந்து நடைபெறும் கட்டுமானப் பணிகளால் காடுகளும் வயல்களும் சுருங்கி, பாம்புகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பாளர் அனில் கண்டாஸ் தெரிவித்தார். இதனாலேயே உணவைத் தேடி பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. மேலும், மழைக்காலத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாம்பு கடிபட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ‘ஆன்டி-வெனம்’ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
