LATEST NEWS
“நானும் டெல்டா காரன் தான்… விளையாட்டுத் துறையில 100-ல் 60 பேர் நம்ம ஆளுங்க..!” சட்டமன்றத்தில் மார்புதட்டிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நானும் டெல்டா காரன் தான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பேரவையில் டெல்டா மாவட்டங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துப் பேசுகையில், விளையாட்டுத் துறையில் 100-ல் 60 பேர் டெல்டா பகுதிகளில் இருந்தே வருகின்ற போதிலும், அங்கு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வகையிலான விளையாட்டு மைதானங்களோ அல்லது தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளோ தற்போதைய நிலையில் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கம் போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்களை உருவாக்கத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். மேலும், ஒலிம்பிக் தரத்திலான 10 அகாடமிகள் மற்றும் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களால் சர்வதேச விளையாட்டு நகரத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுப் பணிகள் துரிதமாகத் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் விரிவாகத் தகவல் பகிர்ந்துள்ளார்.
