CINEMA
“பாரதிராஜா பேண்டில் ஜிப் கூட இருக்காது… ஊக்குதான் குத்தியிருப்பார்..!” 16 வயதினிலே படப்பிடிப்பில் பாரதிராஜா செய்த காரியத்தை கலகலப்பாகப் பகிர்ந்த நடிகர் ரஜினி..!!
16 வயதினிலே படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கலகலப்பாகப் பகிர்ந்து கொண்டார். அப்போதைய நினைவுகளை நினைவு கூர்ந்த அவர், படப்பிடிப்பின் போது தானும் இயக்குநர் பாரதிராஜாவும் ஒரே அறையில் தங்கியிருந்ததாகக் கூறினார். மேலும், பாரதிராஜாவிடம் அப்போது இரண்டு பேண்ட், மூன்று சட்டை மற்றும் ஒரு லுங்கி மட்டுமே இருந்ததாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.
அதில் ஒரு பேண்ட்டில் ஜிப் உடைந்து போனதால், அதைப் பிணைக்க அவர் ஊக்கு (Safety pin) குத்தியிருந்தாராம். படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஸ்ரீதேவி அதைக் கவனித்து கேட்ட போது கூட, பாரதிராஜா அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவருக்கு அந்தப் படத்தை மிகச்சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவனம் இருக்கவில்லை என்று ரஜினி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
