CRIME
நடுரோட்டில் தலை சிதைக்கப்பட்டு இளைஞர் கொடூரக்கொலை… தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் பிரதீப் ராஜ் என்ற இளைஞர் நடுரோட்டில் வைத்து அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மர்மக் கும்பல் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பியோடியது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக பிரதீப் ராஜ் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள்தான் காவல் துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்விரோதம் காரணமாகவே இந்த பயங்கர கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பொதுப்பாதையில் நடந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
