LATEST NEWS
Big Breaking: திமுகவில் இணையும் செல்வப் பெருந்தகை…? திடீர் முடிவால் அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!!
காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தல் நேரத்தில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியிலிருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர் திமுகவுக்குத் தாவக் கூடும் என்ற செய்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், செல்வப்பெருந்தகை திமுகவில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தாலும், அவர் ஓர் உண்மையான தீவிர காங்கிரஸ்காரர் என்பதால் நிச்சயம் அப்படி ஒரு முடிவை எடுக்கமாட்டார் என்று காங்கிரஸ் தரப்பினர் உறுதியாக மறுத்து தெரிவிக்கின்றனர்.
