“செம ஐடியா… ஆரம்பத்துல மனைவி எதிர்ப்பு… இப்ப மாதா மாதம் லட்சங்களில் வருமானம்…” இந்த விவசாயி செஞ்ச சூப்பர் பிளான் என்ன தெரியுமா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செம ஐடியா… ஆரம்பத்துல மனைவி எதிர்ப்பு… இப்ப மாதா மாதம் லட்சங்களில் வருமானம்…” இந்த விவசாயி செஞ்ச சூப்பர் பிளான் என்ன தெரியுமா..?!

Published

on

அமெரிக்காவின் இலினாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி கிளேட்டன் ரோசன்பெர்கர், தமக்குச் சொந்தமான 1,100 ஏக்கர் விவசாய நிலத்தில் 499 அடி உயரமுள்ள பிரம்மாண்ட காற்றாலை ஒன்றை அமைத்ததன் மூலம், பயிர் சாகுபடியைக் காட்டிலும் அதிக வருமானம் ஈட்டி அசத்தி வருகிறார். 2021-ஆம் ஆண்டு இவருக்கு இந்த காற்றாலை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது, விவசாயம் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் இவரது மனைவி தொடக்கத்தில் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் குத்தகை வருமானத்தைக் கணக்கிட்டுப் பார்த்த பிறகு இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டனர். தற்போது கடந்த சில ஆண்டுகளாக இவர்களது நிலத்தில் பயிர்ச் சாகுபடியுடன் காற்றாலையும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இந்த 499 அடி உயர காற்றாலைக்காக 1,100 ஏக்கர் நிலத்தில் வெறும் 1 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நிலத்தின் பெரும்பகுதி சாகுபடிக்கு எந்த இடையூறும் இன்றி அப்படியே கிடைக்கிறது. காற்றாலை நிறுவப்பட்ட பிறகும் கிளேட்டன் வழக்கம்போல சோளம் மற்றும் சோயாபீன்ஸ் பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார். காற்றாலை அமைப்பதற்கு 8 மாதங்கள் வரை ஆகி, பெரிய கருவிகள் நிலத்தின் வழியே கொண்டு செல்லப்பட்ட போதிலும், கட்டுமானம் முடிந்த பிறகு விவசாயப் பணிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement

காற்றாலை அமைத்ததால் பயிர் மூலமாகக் கிடைக்கும் வருமானத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத நிலையில், காற்றாலையின் குத்தகைக் கட்டணம் மூலம் இவருக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இந்த குத்தகைத் தொகை, பயிர் சாகுபடி மூலம் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளது. EDP Renewables என்ற நிறுவனம் இந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து காற்றாலையைப் பராமரித்து வருகிறது. பொதுவாக இதுபோன்ற காற்றாலைகளுக்கு நிலம் தரும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8,000 முதல் 33,000 டாலர்கள் வரை குத்தகைத் தொகையாகக் கிடைக்கிறது. “முன்பு எனக்கு ஓய்வுகாலத் திட்டம் எதுவும் இருக்கவில்லை, ஆனால் இப்போது உறுதியான வருமானம் உள்ளது” என கிளேட்டன் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in