LATEST NEWS
செம அதிர்ச்சியில் விஜய்.. தேர்தல் வரும் முன்பே வேட்பாளரை அறிவித்த செங்கோட்டையன்… தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பு..!!
ஈரோடு அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால், தேர்தல் தேதியே இன்னும் முடிவாகாத நிலையில், மேடையில் பேசிய செங்கோட்டையன், “நாளை களத்திலே போட்டியிட இருக்கின்ற சட்டமன்ற வேட்பாளர் ஜெயக்குமார் அவர்களே” என முன்கூட்டியே வேட்பாளரை உறுதிப்படுத்தி பேசியது கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு காரணமாகவே இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தள்ளிப்போயுள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் தேதியை அறிவிக்காத சூழலில், செங்கோட்டையன் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்திருப்பது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் அவரது கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
