LATEST NEWS
பரபரப்பு..! இதை மட்டும் செஞ்சா தவெகவின் கதை முடிஞ்சிரும்… முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு சிபிஎம் அதிரடி எச்சரிக்கை..!!
தமிழகச் சட்டமன்றத்தில் ரேஷன் அரிசி விநியோகம் தொடர்பாக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் பேசிய கருத்துக்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியைப் பொதுமக்கள் பலரும் நேரடியாகப் பயன்படுத்துவதில்லை என்றும், சிலர் அதனை ஆடு, கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய உணவை இழிவுபடுத்தும் வகையில் இக்கருத்துக்கள் அமைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
அமைச்சர்களின் இந்த உரைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிபிஎம் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தற்போதைய தமிழக அரசுக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். “தமிழ்நாட்டில் வசிக்கும் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் அன்றாட உயிரையும், வாழ்வாதாரத்தையும் இந்த இலவச ரேஷன் அரிசிதான் காப்பாற்றி வருகிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
