LATEST NEWS
ஜஸ்ட் மிஸ்..! “ஐயோ என் குழந்தைங்க” அசுர வேகத்தில் பாய்ந்து வந்த வந்த வெள்ளம்… 2 குழந்தைகளை நூலிழையில் காப்பாற்றிய தாயின் சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரப் பெருவெள்ளத்தின் பாதிப்புகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கட்டுக்கடங்காமல் சீறிப்பாயும் வெள்ளத்தில் இருந்து ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளை நூலிழையில் காப்பாற்றி தப்பி ஓடும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், மரங்கள், கட்டிடங்கள், பாலங்கள், கார்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்தையும் ராட்சத வெள்ள நீர் அசுர வேகத்தில் அடித்துச் இழுத்துச் செல்கிறது.
அப்போது பள்ளிச் சீருடை அணிந்திருக்கும் தனது இரண்டு குழந்தைகளின் கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டு, அந்தப் பெண் சாலையிலிருந்து மேடான பகுதியை நோக்கி மிக விரைவாக ஓடுகிறார். அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்த அடுத்த சில நொடிகளிலேயே, அந்தச் சாலை முழுவதையும் வெள்ள நீர் முழுமையாக ஆக்கிரமிப்பதோடு, அங்கிருந்த மின் கம்பங்களும் வெடித்துச் சிதறுகின்றன.
உயிர்பிழைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் இத்தகைய ஒரு ஆபத்தான சூழலில், பதற்றமடையாமல் தனது இரண்டு குழந்தைகளையும் அவ்வளவு வேகமாகச் செயல்பட வைத்து காப்பாற்றிய அந்தத் தாயின் துணிச்சலான செயலைச் சமூக வலைத்தளங்களில் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே, நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கால் பலி எண்ணிக்கை 547 ஆக உயர்ந்துள்ளது என்ற சோகமான தகவலும் வெளியாகியுள்ளது.
