“என் அப்பா தற்கொலை பண்ணல.. அம்மாவும் அவரும்..” 8 வயது மகள் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்.. நடுக்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் அப்பா தற்கொலை பண்ணல.. அம்மாவும் அவரும்..” 8 வயது மகள் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்.. நடுக்க வைக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்திக்குமார் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், முதலில் தற்கொலை என நினைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மகளின் வாக்குமூலத்தால் அது கொடூரக் கொலை என்ற புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. சக்திக்குமாரின் தாயார் ஹாலாம்மாவுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக ஹாலாம்மா உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காகத் தனது மகளின் வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில், வீட்டில் சக்திக்குமார், அவரது மனைவி மற்றும் கோபால் ஆகிய மூவர் மட்டுமே இருந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் சக்திக்குமாரின் மனைவிக்கும் கோபாலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், அதற்குச் சக்திக்குமார் பெரும் தடையாக இருந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சூழலில், சக்திக்குமார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவரது சிறு வயது மகள் தனது உறவினர்களிடம் ஒரு அதிர்ச்சி உண்மையைப் போட்டுடைத்துள்ளார். தனது தாயும் கோபாலும் இணைந்து தந்தை சக்திக்குமாரைத் தாக்கியதைத் தன் கண்ணெதிரே கண்டதாக அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த சக்திக்குமாரை அவரது மனைவியும் கோபாலும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் தற்கொலை போலக் காட்டுவதற்காகத் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் எனச் சக்திக்குமாரின் குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in