அட கடவுளே..! ஸ்கூட்டர் மீது மோதிய தனியார் பேருந்து..! சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய 52 வயது பெண்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

Uncategorized

அட கடவுளே..! ஸ்கூட்டர் மீது மோதிய தனியார் பேருந்து..! சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய 52 வயது பெண்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!

Published

on

கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்த செட்டுப்புழா பகுதியில், நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று ஸ்கூட்டர் மீது மோதிய கொடூர விபத்தில் 52 வயது பெண்மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்லாழி பகுதியைச் சேர்ந்த சகாதேவன் என்பவரின் மனைவியான அனிதா என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார். காஞ்சனி வழித்தடத்தில் இயங்கி வரும் ‘ஸ்ரேயாஸ்’ என்ற தனியார் பேருந்து, அனிதா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரின் பின்புறமாக அதிவேகமாக வந்து பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த மோதலின் தாக்கத்தால் அனிதா ஸ்கூட்டரிலிருந்து தூக்கி வீசப்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தனியார் பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த மேற்கு காவல் துறையினர் உடனடியாக உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in