“என் வயிறு எரியுதுப்பா.. 2 மாசமா சொல்லாம நிறுத்திட்டாங்க..” கலெக்டர் ஆபீஸில் கண்ணீர் விட்ட கோவை 1 ரூபாய் இட்லி பாட்டி..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“என் வயிறு எரியுதுப்பா.. 2 மாசமா சொல்லாம நிறுத்திட்டாங்க..” கலெக்டர் ஆபீஸில் கண்ணீர் விட்ட கோவை 1 ரூபாய் இட்லி பாட்டி..!!

Published

on

கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையத்தில் 85 வயதான கமலாத்தாள் பாட்டி என்ற வசித்து வருகிறார். இவர் ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் பசியைப் போக்குவதற்காகக் கடந்த பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து கோவையின் மனிதநேய அடையாளமாகத் திகழ்ந்து வருகிறார். சொற்ப வருமானம் மட்டுமே கிடைத்தாலும் இதனை முழுமையான சமூக சேவையாகவே அவர் செய்து வருகிறார். இவரது உன்னதப் பணியைப் பாராட்டி, எரிவாயு நிறுவனம் சார்பில் மாதம் இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக எவ்வித முன்னறிவிப்புமின்றி அந்த உதவி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் சூழலில், கேஸ் சிலிண்டருக்கான முழுச் செலவையும் தனியாகச் சமாளிக்க முடியாமல் தவித்த பாட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்துள்ளார். “இரண்டு மாதங்களாக எதையும் சொல்லாமல் நிறுத்திவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்சியரைச் சந்திக்க வந்தேன்” என்று செய்தியாளர்களிடம் பாட்டி கண்ணீருடன் வேதனை தெரிவித்தார். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விவகாரத்தை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், பாட்டியின் அறப்பணி தடையின்றித் தொடர அரசு உடனடியாக கேஸ் சிலிண்டர் விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் நெட்டிசன்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in