LATEST NEWS
“நடு கடலில் பயங்கரம்.. சுற்றுலாப் படகை விழுங்கிய ராட்சத அலைகள்..” மரணத்தின் விளிம்பில் பயணிகள்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!!
கொலம்பியாவின் சாண்டா மார்ட்டா நகரில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பிளாயா பிளாங்கா மற்றும் எல் ரொடாடெரோ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடுமையான அலைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாகவே இந்தப் படகு கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, படகில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் காக்கும் உடைகளை அணிந்திருந்ததால் எவரும் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த பிற படகுகளும் கப்பல்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டன. இதனால் படகில் இருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
