CINEMA
“அப்பா கோவப்பட்டா அவ்ளோதான்…!” தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்..!!
CM விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் பெற்றோர் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசுகையில், “எனது அம்மா வாரத்திற்கு ஒருமுறை என்னை திட்டிவிடுவார். ஆனால் அப்பா மாதத்திற்கு ஒருமுறை தான் கோபப்படுவார். அப்படி அவருக்கு கோபம் வந்தது என்றால் அவ்வளவு தான். இருந்தாலும், ஒரு தந்தையாக அவர் வெளிப்படுத்தும் அந்த கோபத்தை நான் முழுமையாக மதிக்கவே செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரைப்பட இயக்குநராகத் தடம் பதித்துள்ள அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
