அதிர்ச்சி..! பழ.நெடுமாறன் மகன் ஆஸ்திரேலியாவில் துறவியாக மரணம்.. பாஸ்போர்ட் முடக்கத்தால் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி..! பழ.நெடுமாறன் மகன் ஆஸ்திரேலியாவில் துறவியாக மரணம்.. பாஸ்போர்ட் முடக்கத்தால் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சோகம்..!!

Published

on

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறனின் இளைய மகனான மாணிக்கம் நெடுமாறன் (57), அக்டோபர் 1ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காலமானார். மெல்பர்னில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த இவர், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவி, ஒரு புத்த துறவியாகத் தனது வாழ்வை அமைத்துக் கொண்டார். கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மறைந்த மாணிக்கம் நெடுமாறனின் இறுதிச் சடங்கில் அவரது பெற்றோரான பழ.நெடுமாறனும் அவரது மனைவியும் பங்கேற்கவில்லை. பழ.நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கும் காரணத்தால், அவர்களால் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ய இயலவில்லை என்று அவர்களது குடும்ப வட்டாரங்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in