CRIME
அய்யோ கடவுளே..! லாரியுடன் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய டெம்போ.. 5 பேர் உடல் நசுங்கி பலி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள சமிருத்தி விரைவுச்சாலையில், தமன்காவ்ன் ரயில் நிலையம் அருகே மிகக் கொடூரமான சாலை விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. ஷேகானில் இருந்து வர்தா நோக்கி துர்க்கை அம்மன் சிலையை ஏற்றிச் சென்ற டெம்போ வாகனமும், லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் பலியானதோடு மட்டுமல்லாமல், மேலும் பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 10 பேருக்குக் கடுமையான காயங்களும், மற்றொரு 6 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைக்காக உடனடியாக தமன்காவ்ன் கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அமராவதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகேதன் கதம், சிறப்பு காவல் ஐஜி மகேஷ் பாட்டீல் மற்றும் தமன்காவ்ன் நகராட்சி தலைவர் அர்ச்சனா ரோத்தே ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கும், மருத்துவமனைக்கும் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
