CRIME
முள்வேலியில் தொங்கிய சாக்கு மூட்டை.. பரவிய துர்நாற்றம்.. ஓடிவந்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு பின்னணி..!!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த புத்தன்துறை அருகே உள்ள மடத்துவிளை பகுதியில், அண்ணாசித் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தின் முள்வேலியில் கட்டப்பட்டிருந்த ஒரு சாக்கு மூட்டையிலிருந்து கடந்த சில தினங்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. சாக்கு மூட்டையில் மனித உடல் ஏதேனும் இருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தின் அடிப்படையில், அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் இது குறித்து உடனடியாக அருமனை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களின் முன்னிலையில் அந்தச் சாக்கு மூட்டையை அவிழ்த்துச் சோதனை செய்தனர். அப்போது, அதற்குள் ஒரு நாய் உயிரோடு கை, கால்கள் கட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்ட நிலையில் அழுகிய சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வாயில்லா ஜீவனை இவ்வளவு கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்ற அந்த மனிதாபிமானமற்ற நபர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கண்டுபிடித்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
