LATEST NEWS
BREAKING: திமுக கூட்டணியிலிருந்து விலகிய மேலும் ஒரு கட்சி.. அதிகாரபூர்வ அறிவிப்பால் அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!
திமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வந்த தங்களுக்கு, எந்தவொரு அரசியல் பிரதிநிதித்துவமும் அல்லது உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பொன் முருகேசன் மிகுந்த ஏமாற்றத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவிற்கு எதிராகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் குற்றச்சாட்டு ஒன்றையும் அவர் முன்வைத்துள்ளார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் (தலித் மக்கள்) அரசியல் அதிகாரத்திற்கு வருவதை திமுக தலைமை எவ்வகையிலும் விரும்பவில்லை என்றும், அவர்களின் அரசியல் வளர்ச்சியை முடக்கும் வகையிலேயே திமுக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார். தாராபுரம் உள்ளிட்ட இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த முறிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
