ஜெயில்ல இருந்து வந்த இரண்டே நாள்.. நடுரோட்டில் மனைவியின் தொண்டையை அறுத்த கணவன்.. மாமனார் நிலத்துக்காகக் காதலித்த பெண்ணையே கொன்ற கொடூரம்.!! – cinefeeds
Connect with us

CRIME

ஜெயில்ல இருந்து வந்த இரண்டே நாள்.. நடுரோட்டில் மனைவியின் தொண்டையை அறுத்த கணவன்.. மாமனார் நிலத்துக்காகக் காதலித்த பெண்ணையே கொன்ற கொடூரம்.!!

Published

on

மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் பகுதியில், சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த இரண்டே நாட்களில், மனைவியின் குடும்ப நிலத்தைப் பறிப்பதற்காகக் கணவன் ஒருவன் நடுரோட்டில் வைத்து மனைவியின் தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த ஜோதி சௌராசியா (28) என்ற பெண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லக்கன் ஜோஷி என்ற நபரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு நான்கு மற்றும் ஆறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஜோதி தற்பொழுது ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்துத் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார்.

இந்தக் கொடூரக் கொலைக்குக் குடும்ப நிலத் தகராறு என்று கூறப்பட்டாலும், உண்மைப் பின்னணி வேறு விதமாக உள்ளது. ஜோதியின் தந்தைக்குச் சொந்தமான நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றித் தருமாறு லக்கன் ஜோஷி தொடர்ந்து ஜோதியைத் சித்திரவதை செய்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளான். இதுமட்டுமன்றி, ஜோதியின் பெற்றோரையும் அவன் கொடூரமாகத் தாக்கியதால், அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த சில நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

Advertisement

சம்பவத்தன்று ஜோதி வீட்டை விட்டு வெளியே வந்தபோது, லக்கன் ஜோஷி மற்றும் அவனது கூட்டாளி ஆகியோர் அவரை வழிமறித்துக் கடுமையான ஆயுதத்தால் தாக்கியதில் ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதன்பின், தலைமறைவாக இருந்த முதன்மைக் குற்றவாளி லக்கன் ஜோஷி மற்றும் அவனது கூட்டாளியை உத்திரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்து சட்டப் பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in