“போலீசாரின் மெகா ஸ்கெட்ச்..!” 3.5 ஆண்டுகளாகத் தேடப்பட்ட ரூ.5 லட்சம் வெகுமதி குற்றவாளி அதிரடி கைது.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“போலீசாரின் மெகா ஸ்கெட்ச்..!” 3.5 ஆண்டுகளாகத் தேடப்பட்ட ரூ.5 லட்சம் வெகுமதி குற்றவாளி அதிரடி கைது.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி அதீக் அகமது கும்பலின் ஷார்ப் சூட்டர் முகமது அர்மான், பீகாரில் உள்ள கயா மத்திய சிறையில் இருந்து உத்தரப் பிரதேச போலீசாரால் பிரயாக்ராஜுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். பிரயாக்ராஜ் உமேஷ் பால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவரைக் கண்டுபிடிப்பவர்க்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சுமார் மூன்றரை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இவர், பீகாரில் வேறொரு துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்து கயா சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அண்மையில்தான் உபி போலீசாருக்குத் தெரியவந்தது.

கடந்த செப்டம்பர் 30 அன்று உபி போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கயா சிறைக்குச் சென்று அங்குள்ள ஆவணங்களைச் சரிபார்த்து அர்மானின் அடையாத்தை உறுதி செய்தனர். அதன்பின்னர், அக்டோபர் 1 ஆம் தேதி கயா சிவில் நீதிமன்றத்தில் டிரான்சிட் ரிமாண்ட் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற அனுமதியுடன் சிறைத்துறை நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அர்மானை பிரயாக்ராஜ் போலீசார் அழைத்துச் சென்றனர்.

Advertisement

கடந்த 2023 பிப்ரவரி 24 அன்று பிரயாக்ராஜில் வழக்கறிஞர் உமேஷ் பால் மற்றும் அவரது இரு பாதுகாப்பு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அர்மானுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த கொடூரக் கொலையின் போது அர்மான் பைக் ஓட்டியதும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கட்டூ முஸ்லிம் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியானது. இதற்கிடையே, அர்மானை பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லும் வழியில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரது குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in