LATEST NEWS
BREAKING: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறுத்தம்.. சற்றுமுன் பரபரப்பு..!!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டரை புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) குளறுபடி ஏற்பட்டது. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் ‘விசில்’ சின்னத்திற்கு நேராக இருந்த நீல நிற பொத்தானில் கறுப்பு மை பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைப் பார்த்த அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்து, திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தேர்தல் அலுவலர்கள் உடனடியாகப் புதிய மாற்று இயந்திரத்தை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டதால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
