13 நாட்கள் பூட்டிய அறை… அலற அலற நடந்த கொடூரம்… 13 நாட்களாகத் தேடப்பட்டு வந்த இளம்பெண்.. அறைக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

13 நாட்கள் பூட்டிய அறை… அலற அலற நடந்த கொடூரம்… 13 நாட்களாகத் தேடப்பட்டு வந்த இளம்பெண்.. அறைக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்ற அர்பாஸ் கான் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜ்பாடா பகுதியைச் சேர்ந்த குற்றவாளி அர்பாஸ் கான், அந்தப் பெண்ணை அஜ்மீருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து பூட்டியுள்ளார்.

அஜ்மீரில் உள்ள பூட்டிய அறையில் சுமார் 13 நாட்கள் (312 மணிநேரம்) அந்த இளம்பெண்ணை சிறைவைத்துத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் எதிர்ப்பு தெரிவித்தபோதெல்லாம் அவருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், 13 நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணை அவருடைய கிராமத்திற்கு வெளியே விட்டுவிட்டு அர்பாஸ் கான் தப்பி ஓடியுள்ளார்.

Advertisement

வீட்டிற்குத் திரும்பிய பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துக் குடும்பத்தினரிடம் கூறியதையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பாக்பாடா காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளி அர்பாஸ் கானைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in