“இப்படி ஒரு ஓட்டமா..” டிராக்சூட் இல்லை.. ஷூ இல்லை… வெறும் சேலையை மடிச்சு கட்டி 1,600 மீட்டர் தூரத்தை 6 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்த பெண்..! வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படி ஒரு ஓட்டமா..” டிராக்சூட் இல்லை.. ஷூ இல்லை… வெறும் சேலையை மடிச்சு கட்டி 1,600 மீட்டர் தூரத்தை 6 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்த பெண்..! வைரல் வீடியோ..!!

Published

on

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டத்தின் துல்மி வட்டாரத்தில் உள்ள சோசோ கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா குமாரி. கணவனை இழந்த இவருக்கு, இரண்டு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியாரைப் பராமரிக்கும் குடும்பப் பொறுப்பு உள்ளது. வறுமைச் சூழல் மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியில், ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு செய்தி கவிதாவுக்கு ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது.

ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கான உடற்தகுதித் தேர்வில், சுட்டெரிக்கும் நண்பகல் வெயிலில், புடவை அணிந்தபடி வெறுங்காலுடன் கவிதா 1,600 மீட்டர் தூரத்தை ஓடினார். பெண் போட்டியாளர்கள் 1,600 மீட்டர் தூரத்தைக் கடக்க அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நேரம் 10 நிமிடங்கள் என்பதோடு, 8 நிமிடங்கள் என்பது மிகச் சிறந்த மதிப்பெண்ணாகக் கருதப்படுகிறது. ஆனால் டிராக் சூட் அல்லது காலணிகள் இல்லாமல், தனது சேலையை மடித்துக் கொண்டு ஓடிய கவிதா, ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வெகு முன்பாகவே வெறும் 6 நிமிடங்களில் இலக்கை அடைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Advertisement

https://www.instagram.com/reel/DeKFO-FzmH3/?utm_source=ig_web_button_share_sheet

விளையாட்டுக் காலணிகள் அல்லது டிராக்சூட்கள் வாங்கப் பணம் இல்லாததால், கவிதா தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தான் தைத்த புடவையை அணிந்துகொண்டு சாலையில் பயிற்சி செய்து வந்துள்ளார். கவிதா புடவை அணிந்து வெறுங்காலுடன் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் ஓட்டப் பயிற்சி மைய அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். உடைகளோ சூழ்நிலைகளோ முக்கியமல்ல, இலக்கே முக்கியம் என்பதை இச்சாதனை மூலம் கவிதா நிரூபித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in