அடச்சீ.. சொந்த மகளைக் சீரழித்த தந்தை.. மரத்தில் கட்டி வைத்து மனைவி செய்த வெறிச்செயல்.. குடும்பத்தை உலுக்கிய பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ.. சொந்த மகளைக் சீரழித்த தந்தை.. மரத்தில் கட்டி வைத்து மனைவி செய்த வெறிச்செயல்.. குடும்பத்தை உலுக்கிய பகீர் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம், அக்கன்னபேட் மண்டலத்திற்குட்பட்ட சேவாலால் தாண்டா பகுதியில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி கணவனை மனைவியே இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பகவான் என்பவர் தனது சொந்த மகளுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி ராஜேஸ்வரி, தனது உறவினர்களுடன் சேர்ந்து கணவன் பகவானை இரும்பு கம்பியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். பின்னர், அவரது உடலை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பகவான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், உயிரிழந்த பகவானின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான மனைவி ராஜேஸ்வரியைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றக் காவலில் (Remand) சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in