LATEST NEWS
“பாத்ரூமில் 3 மணிநேரம் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” உதயநிதி ஸ்டாலினை மிகக் கொச்சையாக விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார்.. தமிழக அரசியலில் புதிய தீப்பொறி..!
வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 விலைக்குக் கொள்முதல் செய்யப்படுவதாக எழும் விமர்சனங்களுக்குத் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விலை உயர்வு நிர்வாகத் தோல்வி மற்றும் முறைகேடு என்று குற்றம் சாட்டிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அமைச்சர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தற்போதைய மின்சாரக் கொள்முதல் டெண்டர் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவும் மின்சாரத் தேவை மிக அதிகமாக இருக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 6 மணி நேரத்திற்கு மட்டுமே இந்த விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளைச் சரிசெய்யத் தவெக அரசு கடுமையாகப் போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட கால மின் ஒப்பந்தங்கள் குறித்துப் பொய் பரப்புரை செய்வதாகக் கூறி, திமுகவின் செந்தில் பாலாஜியை ‘கரூர் கம்பெனி’ என்றும், உதயநிதி ஸ்டாலினை ‘3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி’ என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் போடப்பட்ட நீண்ட கால ஒப்பந்தங்கள் அனைத்தும் 2013-இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டவை என்றும், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் எந்தவொரு நீண்ட கால ஒப்பந்தமும் போடப்படவில்லை என்றும் அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார்.
