“அடக்கடவுளே..! கதவைத் திறக்கச் சொன்ன மனைவி… பயந்து போய் 21-வது மாடி பால்கனியில இருந்து இறங்க முயன்ற கணவன்.. அடுத்த நொடியே அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக்கடவுளே..! கதவைத் திறக்கச் சொன்ன மனைவி… பயந்து போய் 21-வது மாடி பால்கனியில இருந்து இறங்க முயன்ற கணவன்.. அடுத்த நொடியே அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ‘செஞ்சுரியன் பார்க் ட்ரோபிகல் கார்டன் சொசைட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 31 வயதான ஹர்ஷித் லவானியா என்ற இளைஞர் வசித்து வந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட நீண்டநாள் குடும்பத் தகராறு காரணமாக ஹர்ஷித் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று அவரது மனைவி திடீரென ஹர்ஷித் தங்கியிருந்த 21-வது தளத்தில் உள்ள வீட்டிற்கு வந்து அவரிடம் பேச முயன்றுள்ளார்.

ஆனால், மனைவியுடன் மீண்டும் சண்டை போட விரும்பாத ஹர்ஷித், கதவைத் திறக்க மறுத்து அமைதி காத்தார். இதனால் அவரது மனைவி, கட்டிடத்தின் பாதுகாப்பு ஊழியர்களை அழைத்து வீட்டின் கதவைத் திறக்க முயன்றார். இதனால் பதற்றமடைந்த ஹர்ஷித், மனைவியைச் சந்தித்து வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு, தன் வீட்டின் பால்கனி வழியே கீழே உள்ள தளத்திற்கு ஆபத்தான முறையில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

Advertisement

21-வது தளத்தின் பால்கனியில் இருந்து கீழே இறங்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது கை நழுவி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை குடும்பத்தினரால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மனைவியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in