CRIME
“தாய்நாட்டிற்குச் சேவை செய்ததே ஒரு குற்றமா..?!” முன்னாள் போலீஸ் அதிகாரியை 6 மாதங்களாக தேடிய குடும்பம்… பாலைவனத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஆப்கானிஸ்தானின் முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் தலிபான்களால் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அவரது உடலை தலிபான்கள் பாலைவனத்தில் புதைத்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாகத் தேடி அலைந்த அவரது குடும்பத்தினர் இறுதியாக அவரது எச்சங்களை மட்டுமே கண்டெடுத்துள்ளனர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தங்களது தாய்நாட்டிற்காகப் பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு மற்றும் இராணுவப் படையினரைத் தேடித் பிடித்து, பழிவாங்கும் நோக்கில் கடத்திச் சென்று படுகொலை செய்து வரும் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு இந்தச் சம்பவமும் ஒரு சான்றாக மாறியுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டி வருவதாகக் கூறுபவர்கள், அந்நாட்டு மக்களின் இத்தகைய சொல்லொணாத் துயரங்களை மறைப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாட்டிற்காகச் சேவையாற்றிவிட்டு, தற்பொழுது சாதாரண குடிமக்களாக வாழ முயன்ற முன்னாள் ராணுவ வீரர்களைத் தொடர்ந்து பின்தொடர்வதும், சித்திரவதை செய்வதும் மன்னிக்க முடியாத குற்றம் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அநீதிக்குக் காரணமான தலிபான் அமைப்பினரையும் அவர்களுக்கு உத்தரவிட்ட தலைவர்களையும் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்ற குரல் உலகளவில் வலுத்து வருகிறது.
