“ரூ.50,000 கமிஷன் ஆசை…” காதலனுக்காக காதலி செய்த விபரீதம்.. ரயிலில் வைத்து பெண் இன்ஜினியரை மடக்கிய போலீஸ்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ரூ.50,000 கமிஷன் ஆசை…” காதலனுக்காக காதலி செய்த விபரீதம்.. ரயிலில் வைத்து பெண் இன்ஜினியரை மடக்கிய போலீஸ்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாக சௌமியா என்ற இளம் பெண், சிறையில் இருக்கும் தனது காதலனை ஜாமீனில் எடுப்பதற்காகப் பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் கடத்தியபோது போலீசாரிடம் கைகூலி ஆசையால் சிக்கியுள்ளார். விஜயவாடா படமடா பகுதியைச் சேர்ந்த நாக சௌமியாவும், அவரது காதலர் காசிவர்தனும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காசிவர்தன் சித்தூர் போலீசாரால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையிலிருந்து மீட்கப் பணம் இல்லாததால் நாக சௌமியா மற்ற கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து கமிஷன் பணத்திற்காக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கிருஷ்ணலங்கா பகுதியைச் சேர்ந்த பஷீர் என்ற கடத்தல்காரன் 50,000 ரூபாய் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை காட்டியதை அடுத்து, நாக சௌமியா பெங்களூரு சென்று 110 கிராம் எடைக் கொண்ட எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை வாங்கியுள்ளார். பெங்களூருவில் இருந்து விஜயவாடா நோக்கி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். நாக சௌமியா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தப்பியோட முயன்ற முக்கியக் குற்றவாளியான பஷீரையும் போலீசார் தீவிரமாகத் தேடித் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in