அய்யயோ.. சாலையில் இருந்த ராட்சத பள்ளம்.. பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யயோ.. சாலையில் இருந்த ராட்சத பள்ளம்.. பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

மெக்சிகோவின் சான்டா மரியா அகுவாகடிட்லான் பகுதியில் உள்ள நேஷனல் தெருவில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தச் சால வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், அப்பகுதி மக்கள் எச்சரிக்கைக்காகக் கட்டியிருந்த பாதுகாப்பு நாடாவை கவனிக்காமல் மோதித் தள்ளியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், நேராக அந்தப் பெரிய பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

சாலையில் ஆபத்தான முறையில் பள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், அதிகாரிகள் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த மக்களே அந்தப் பகுதியில் எச்சரிக்கை நாடாவைக் கட்டியிருந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in