LATEST NEWS
பார்க்கும்போதே நெஞ்சு பதறுது.. பாலத்தின் உச்சியில் ஆபத்தான ஸ்டண்ட்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில், நபர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்ய முயன்று, நேரடியாகக் காட்டாற்றுத் தண்ணீருக்குள் விழுந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆற்றுப் பாலத்தின் மிகக் குறுகிய மற்றும் உயரமான பகுதியில் நின்றுகொண்டு, எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இன்றி அவர் செய்த அந்த ஆபத்தான அத்துமீறல் விபத்தில் முடிந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து அவர் ஆற்றுக்குள் நேராக விழும் காட்சி பார்ப்போரைக் கதிகலங்கச் செய்துள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், இவ்வளவு ஆபத்தான மற்றும் விபரீதமான காரியத்தை ஒரு நபர் ஏன் செய்ய வேண்டும் என்ற கோணத்தில் உள்ளூர் மக்கள் விவாதித்து வருகின்றனர். அந்த நபர் ஏதேனும் மனநலம் சார்ந்த கடுமையான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்திருக்கலாம், அதன் காரணமாகவே இத்தகைய விபரீத முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த பித்தோராகர் காவல்துறையினர், ஆற்றுக்குள் விழுந்த அந்த நபரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
