CINEMA
“நான் சந்தோஷமாவே இல்லை…” புகழின் உச்சத்தில் இருக்கும்போதே இப்படி ஒரு வேதனையா..? மனமுடைந்து பேசிய விஜே அர்ச்சனா..!!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா சந்தோக். இவர் சின்னத்திரை உலகில் நீண்ட காலமாகப் பல நிகழ்ச்சிகளைச் செய்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சீரியல் நடிகை லட்சுமியின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அர்ச்சனா, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வலியும் வேதனையும் இன்னமும் ஒளிந்திருப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார். இந்தப் பேட்டியின் போது அவரது வெளிப்படையான பேச்சுகள் பலரையும் கவனிக்க வைத்துள்ளன.
அப்பேட்டியில், தன்னைத்தானே பேட்டி எடுத்தால் என்ன கேள்வி கேட்பாய் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் முதலில் என்னிடம், ‘நீ சந்தோஷமாக இருக்கிறாயா?’ என்று கேட்பேன். அதற்கு நான், கண்டிப்பாக சந்தோஷம் கிடையாது என்றுதான் சொல்லுவேன்” எனக் கூறியுள்ளார். மேலும், வாழ்க்கையில் மனநிறைவு இருக்கிறது, எல்லாமே முழுமையாக இருக்கிறது, நாம் ஆசைப்பட்ட விஷயங்களும் உழைப்பும் கூட கிடைத்துவிட்டது, ஆனால் மனதார சந்தோஷமாக இருக்கிறாயா என்று கேட்டால் அர்ச்சனாவிடம் அந்த உண்மையான சந்தோஷம் இல்லை என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
