LATEST NEWS
மக்களே உஷார்! சென்னைக்கு ரெட் அலர்ட்.. சைலண்ட் மோடில் இருந்தாலும் அலறிய போன்கள்.. பீதியில் சென்னைவாசிகள்..!!
சென்னையில் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் செல்போன்களுக்கு ‘செல் பிராட்காஸ்ட்’ தொழில்நுட்பம் மூலம் அவசரகால எச்சரிக்கை அனுப்பப்பட்டது. சைலண்ட் மோடில் இருந்த போன்களிலும் உரத்த சத்தத்துடன் சைரன் ஒலித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்; பின்னர் இது ஒரு சோதனையே என்பதை அறிந்து நிம்மதியடைந்தனர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தேசிய பேரிடர் மீட்பப் படை தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
