LATEST NEWS
“அவங்க சொன்ன அந்த பதில்…” இரண்டு சிறுமிகளை அலேக்காக தூக்க நினைத்த கும்பல்… பெண் அதிகாரி செய்த மாஸ் காரியம்.. இரயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்..!!
பீகார் இரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பெண் அதிகாரி ஒருவர் காட்டிய துரிதமான புத்தி கூர்மையால், இரண்டு சிறுமிகள் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். டிக்கெட் எடுக்க வந்த அந்த இரு சிறுமிகளிடமும் அந்த பெண் அதிகாரி சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததால், ஆபத்தை உணர்ந்த அதிகாரி உடனடியாக செயல்பட்டு அவர்களை மீட்டதோடு, கடத்தல் போன்ற ஒரு பெரிய அசம்பாவிதத்தையும் தடுத்து நிறுத்தினார்.
உங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள் என்பதை எப்போதும் கூர்ந்து கவனியுங்கள். பிள்ளைகளுக்கு “சுதந்திரம்” தருகிறோம் என்ற பெயரில் அவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ இருந்துவிடாதீர்கள். பெற்றோர்களின் சிறிய விழிப்புணர்வும் தொடர் கண்காணிப்பும் மட்டுமே பிள்ளைகளை இது போன்ற பெரிய ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும்.
