CRIME
“படுக்கையறையில் சிதறிக்கிடந்த தலைமுடி, உடைந்த போன்..!” 5 மாத கர்ப்பிணி இன்ஸ்டா பிரபலத்திற்கு நேர்ந்த கொடூரம்.. கள்ளகாதலனின் வெறிச்செயல்.. கதிகலங்க வைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரின் நஹர்பூர் பகுதியில், தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வந்த 28 வயது இளம் பெண் குங்கும், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனத்தைச் சேர்ந்த குங்கும், சமூக ஊடகங்களில் ரீல்ஸ் செய்து வந்தவர். ஏற்கனவே திருமணமான இவருக்கும், இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான யோகேஷ் சௌத்ரி (25) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாக, இருவரும் தங்களது குடும்பங்களை விட்டு வெளியேறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அல்வாரில் கணவன்-மனைவியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
வாடகை வீட்டின் மேல் மாடியில் குங்கும் நீண்ட நேரமாக அசைவின்றிப் படுக்கையில் கிடப்பதைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது குங்கும் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த எம்.ஐ.ஏ காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, குங்குமின் கழுத்தில் காயங்கள் இருந்ததும், அறையின் பல்வேறு இடங்களில் அவரது தலைமுடி சிதறிக் கிடந்ததும், அருகில் உடைந்த செல்போன் கிடந்ததும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் கொலை நடப்பதற்கு முன்பு இருவருக்கும் இடையே பயங்கரமான கைகலப்பு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மோதலின் உச்சமாக யோகேஷ் குங்குமைக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குங்குமின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கொலையாளி யோகேஷ் சௌத்ரி தனது கைபேசியை அணைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தேடி வரும் போலீசார், கொலைக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
