“தைரியம் இருந்தா இப்ப தேர்தல் நடத்திப் பாருங்க..” தவெக ஆட்சிக்கு திமுக ரகுபதி விடுத்த அதிரடி சவால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தைரியம் இருந்தா இப்ப தேர்தல் நடத்திப் பாருங்க..” தவெக ஆட்சிக்கு திமுக ரகுபதி விடுத்த அதிரடி சவால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

Published

on

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி இளஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக அவர் பிள்ளைமங்கலத்தில் நிழற்குடை, துளையானூர் மற்றும் அண்டக்குடிப்பட்டியில் கலையரங்கம், இளஞ்சாரூரில் சுகாதார வளாகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகப் புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை என்றும், வெறும் அறிவிப்புகளோடு ‘ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்’ மூலமாகவே இந்த ஆட்சி நடந்து வருகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தவெக அரசு மத்திய அரசையும் காங்கிரஸையும் பகைத்துக் கொள்ளாமல், ‘பாலுக்குக் காவல் பூனைக்குத் தோழன்’ என்ற பாணியில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், கடந்த தேர்தலில் தவெக பாஜாக-வின் ‘ஸ்லீப்பர் செல்லாக’ செயல்பட்டதாகவும், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் 80,000 வாக்குகள் நீக்கப்பட்டதாலேயே தவெக வெற்றி பெற்றது என்றும், தவெக-விற்கு வாக்களித்த மக்கள் கடந்த 5 மாதங்களாகச் சங்கடத்தில் இருப்பதாகவும் சாடினார். தவெக அமைச்சரவையில் தைரியமாகப் பொய் பேசும் அமைச்சர்கள் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்திற்கு தவெக-வைச் சேர்ந்தவர்களே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

தவெக ஆட்சி ஒரு ஜோதிடரையும், மூன்று ரெட்டி சகோதரர்களையும் நம்பியே நடப்பதாகவும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறியாமையால் பேசி வருவதாகவும் விமர்சித்தார். மேலும், மோடியிடம் தைரியமாகக் கோரிக்கைகளை முன்வைத்த ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டும்தான் என்றும், பாஜாக-வை இந்தியாவில் சமரசமின்றி எதிர்த்த ஒரே இயக்கம் திமுக-தான் என்றும் பெருமிதம் தெரிவித்தார். தற்போது தைரியம் இருந்தால் தேர்தல் நடத்திப் பார்க்கட்டும், அப்படித் தேர்தல் நடத்தினால் ஆட்சியைப் பிடித்துக் காட்டும் தைரியம் திமுக-வுக்கு மட்டும்தான் உண்டு என எஸ். ரகுபதி சவால் விடுத்துப் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in