பெத்த பிள்ளைன்னு கூட பாக்கல…! “அவரை கல்யாணம் பண்ணலனா செத்துடுவேன்” தந்தையின் கண்முன்னே சவால் விட்ட மகள்.. அடுத்த நொடியே நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பெத்த பிள்ளைன்னு கூட பாக்கல…! “அவரை கல்யாணம் பண்ணலனா செத்துடுவேன்” தந்தையின் கண்முன்னே சவால் விட்ட மகள்.. அடுத்த நொடியே நேர்ந்த கொடூரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் ஏலாவ் காவல் எல்லைக்குட்பட்ட திவன்பூர் கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தனது 18 வயது மகள் சாஜியாவிற்கு அரசு வேலையில் இருக்கும் ஒருவருடன் அவரது தந்தை திருமணப் பேசி முடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, தான் மற்றொரு இளைஞரைக் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றும் சாஜியா கூறியதால் ஆத்திரமடைந்த தந்தை, துப்பாக்கியால் மகளின் தலையில் சுட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளம்பெண் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக சைஃபாய் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உயிருக்குப் போராடி வரும் நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள தந்தையைக் கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in