CRIME
“அடக்கடவுளே.. பெற்ற தாயை ஓட ஓட விரட்டி அடித்த 21 வயது மகன்.. தடுத்துக் கதறிய தங்கை.. போதையில் அரங்கேறிய கொடூரம்.. இறுதியில் நேர்ந்த சோகம்..!!
அர்ஜென்டினாவின் சால்டா மாகாணத்தில் உள்ள ஜோவாக்வின் வி. கோன்சலஸ் நகரில், 21 வயது வாலிபர் ஒருவன் பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர், தான் வசித்து வந்த வீட்டிற்கு மதுபோதையில் வந்து, தனது 38 வயது தாயான டெலிசியா பொல்லாடாஎன்பவரைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் இந்தத் தாக்குதலைத் தடுக்கத் துணிச்சலுடன் போராடியும், அந்த வாலிபர் தனது தாயை இரக்கமின்றித் தொடர்ந்து தாக்கியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவசர சேவைகளைத் தொடர்பு கொண்டு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டெலிசியாவை மீட்டனர். தாக்குதல் நடந்து 45 நிமிடங்களுக்குப் பிறகு அவர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் கடுமையான காயம் காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடற்கூறாய்வு அறிக்கையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த வாலிபர் மீது பெண்ணைக் கொலை செய்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
