CRIME
“சாலையில் காத்திருந்த எமன்..” வாலிபரின் மூக்கு, கண் கிழிந்து ரத்த வெள்ளம் – அதிர்ச்சி பின்னணி.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து மாஞ்சா நூல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சில நாட்களிலேயே, உன்கல் பகுதியில் மற்றொரு இளைஞர் மாஞ்சா நூலால் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை மாலை நேரத்தில் அந்த இளைஞர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது முகத்தில் பலமாக வெட்டியுள்ளது. இதில் அவரது மூக்கு மற்றும் கண் பகுதிகளில் கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
படுகாயமடைந்த அந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கண் மற்றும் மூக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆழமான காயங்கள் காரணமாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். தடை செய்யப்பட்ட ஆபத்தான மாஞ்சா நூல்களின் பயன்பாடு இன்னும் தொடர்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மேலும் பல உயிரிழப்புகளையும் விபத்துகளையும் தடுக்க இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட அமலாக்கமும், தீவிரக் கண்காணிப்பும் உடனடியாகத் தேவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
