“விடுதி அறையில் 15 வயது சிறுமிகளின் அலறல் சத்தம் ..” நள்ளிரவில் கேரள வாலிபர்கள் செய்த பகீர் காரியம்.. கதவை உடைத்த சிங்கப்பெண் படை! வேளாங்கண்ணியில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“விடுதி அறையில் 15 வயது சிறுமிகளின் அலறல் சத்தம் ..” நள்ளிரவில் கேரள வாலிபர்கள் செய்த பகீர் காரியம்.. கதவை உடைத்த சிங்கப்பெண் படை! வேளாங்கண்ணியில் பரபரப்பு..!!

Published

on

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை, தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு சிறுமிகளும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் வேளாங்கண்ணி கடற்கரைப் பகுதியில் அவர்கள் தனியாக நின்றுகொண்டிருந்தபோது, கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த 15 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஆண்டனி மற்றும் விஷால் ஆகிய இரு இளைஞர்கள் சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர், சிறுமிகளை அங்குள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று நள்ளிரவு முழுவதும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது விடுதி அறையில் இருந்து சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக வேளாங்கண்ணி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், சிங்கப்பெண் அதிரடிப்படையினரும் பாதிக்கப்பட்ட சிறுமிகளைப் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குற்றவாளிகளான ஆண்டனி மற்றும் விஷால் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் தற்போது நாகப்பட்டினத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in