“என் காதலை மறுப்பாயா..?” நடுரோட்டில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. முன்னாள் காதலின் வெறி செயல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் காதலை மறுப்பாயா..?” நடுரோட்டில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. முன்னாள் காதலின் வெறி செயல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை, அவருக்காக மதம் மாறிய காதலன் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிந்து வந்த 21 வயதான சாதியா ஷேக் என்ற பெண், கடந்த அக்டோபர் 20 அன்று காலை நேருள் ரயில் நிலையம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அவரது முன்னாள் காதலனான 27 வயது தானிஷ் அன்சாரி சாதியாவின் நெஞ்சு, வயிறு, கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த சாதியா உடனடியாக சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் பரிதாபமாக உயிரிழந்தார். சாதியாவுடனான காதலுக்காகத் தனது பெயரை அனில் என்பதில் இருந்து தானிஷ் அன்சாரி என மாற்றிக்கொண்டதாகக் கூறப்படும் அந்த வாலிபர், சாதியா தனது திருமண விருப்பத்தை நிராகரித்ததாலும், அவர் வேறொரு நபருடன் பழகி வருவதாகச் சந்தேகமடைந்ததாலும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த பயங்கரக் குற்றத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தானிஷ் அன்சாரியைக் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in