பகீர்..! டீசல் கேன்களுடன் அங்கு புகுந்த மணமகள் வீட்டார்.. மணமகனை உயிரோடு எரிக்க முயன்ற கொடூரம்.. நடந்தது என்ன..? பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! டீசல் கேன்களுடன் அங்கு புகுந்த மணமகள் வீட்டார்.. மணமகனை உயிரோடு எரிக்க முயன்ற கொடூரம்.. நடந்தது என்ன..? பெரும் பரபரப்பு..!!

Published

on

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தின் யோலா நகரில், காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமண மண்டபத்திற்குள் புகுந்த மணமகளின் உறவினர்கள், மணமகன் மீது டீசலை ஊற்றி உயிரோடு எரிக்க முயன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோலா நகரைச் சேர்ந்த ரிஷப் தீபக் பகுகுண்டே என்பவரும், நிபாத் தாலுகாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கடந்த செப்டம்பர் மாதம் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக யோலா நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென டீசல் கேன்களுடன் அங்கு புகுந்த மணமகளின் உறவினர்கள், ஆத்திரத்தில் மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது டீசலை ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

மணமகனின் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த மோதலை அங்கிருந்த சிலர் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யோலா நகர போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, இச்சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் சிலரைத் தடுத்து வைத்துக் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in