“திமுக தான் எங்க டார்கெட்” விஜய்யின் மேஜையில் இருந்த ‘3 பைல்’ ரகசியம்… தனுஷ் அரசியல் பேச்சுக்கு நடுவே முதலமைச்சர் விஜய்யின் பக்கா வியூகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுக தான் எங்க டார்கெட்” விஜய்யின் மேஜையில் இருந்த ‘3 பைல்’ ரகசியம்… தனுஷ் அரசியல் பேச்சுக்கு நடுவே முதலமைச்சர் விஜய்யின் பக்கா வியூகம்..!!

Published

on

தமிழக அரசியலில் திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அடுத்தடுத்து அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் விஜய், தனது மேஜையில் மூன்று முக்கிய கோப்புகள் காத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த கோப்புகள் திமுக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எ.வ.வேலு ஆகியோரின் துறைகள் சார்ந்தது என்று கூறப்படும் நிலையில், தற்போது அவற்றில் இரண்டு விவகாரங்களில் தவெக அரசு சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவின் முக்கிய மாஜி அமைச்சர்கள் இருவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்ந்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நீதிமன்ற உத்தரவுகளின் பின்னணியில் மாஜி அமைச்சர்கள் இருவர் மீதான கைது நடவடிக்கைகளுக்கு பிடி இறுகியுள்ளதால், தவெகவின் எவர்கிரீன் டார்கெட் திமுக தான் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, நடிகர் தனுஷின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் வரும் 2031 சட்டப்பேரவை தேர்தலில் ‘விஜய் vs தனுஷ்’ என்ற போட்டி அமையலாம் என்ற ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் கணிப்புகள் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in