CRIME
“வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்…” கதவை திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. காதலுக்கு தடையாய் இருந்த தந்தை.. தூக்க மாத்திரை குடுத்து கொடூரமாக கொன்று பெட்டியில் அடைத்த மகள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம், இட்டாவா மாவட்டத்தில் உள்ள கான்சிராம் காலனியில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஷியாம் சுந்தர் கத்தேரியா என்பவர் தனது இளைய மகள் பூஜையுடன் வசித்து வந்தார். கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இரவில், தந்தையின் எதிர்ப்பை மீறி தன் காதலனுடன் இருக்கத் திட்டமிட்ட சிறுமி பூஜாவும், அவரது 21 வயது காதலன் அபிலாஷ் சிங்கும் சேர்ந்து தந்தையைத் தீர்த்துக்கட்ட பயங்கரமான சதித் திட்டம் தீட்டினர். பல நாட்களாகத் தந்தை மற்றும் தங்கையுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், சந்தேகமடைந்த மூத்த மகள் தனது மாமனாருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தந்தையின் சடலம் ஒரு இரும்புப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், இளைய மகள் தலைமறைவாகியிருந்ததும் தெரியவந்துள்ளது.
போலீசாரின் விசாரணையில், கடந்த ஐந்து மாதங்களாகப் பூஜாவிற்கும் அபிலாஷுக்கும் இடையே காதல் உறவு இருந்து வந்ததும், ஷியாம் சுந்தர் இந்த உறவை கடுமையாக எதிர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், சம்பவத்தன்று இரவு ஷியாம் சுந்தருக்கு தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மயக்கமடைந்த பிறகு, கட்டிலில் கட்டிப்போடப்பட்டு, கத்தியாலும் அம்மிகல்லின் குண்டாலும் தாக்கி அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவரது உடல் மூன்று கம்பளிப் போர்வைகளால் சுற்றப்பட்டு ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டதுடன், அவரது செல்போன் அருகP உள்ள சாக்கடையில் வீசப்பட்டு எபிடென்ஸ்அழிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து குடும்பத்தினர் வந்து பார்த்தபோது இந்த அதிர்ச்சிகரமான கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவில் லைன் காவல் நிலைய போலீசார், எஸ்பி பிரஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவாவின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து, குவாலியர் சந்திப்புப் பகுதியில் பதுங்கியிருந்த சிறுமி மற்றும் அவரது காதலன் அபிலாஷ் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, அம்மிகல் குண்டா, ரத்தக்கறையேறிய ஆடைகள் மற்றும் சடலம் வைக்கப்பட்ட பெட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, இந்த வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
