CRIME
அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்.. கட்டுப்பாட்டை இழந்து பின்னால் இருந்து தூக்கி வீசிய சொகுசு கார்.. ரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது பின்னால் இருந்து பயங்கரமாக மோதிய நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரோஹ்தக்கின் ஜாட் பவன் பகுதிக்கு அருகே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சாலையில் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்த அவர்கள் இருவரையும், கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார் தூக்கி வீசிய கொடூரம் அந்தச் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தக் கொடூரமான மோதலில் தாயும் மகளும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து அதிவேகமாகத் தப்பியோடிவிட்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரோஹ்தக் போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரின் பதிவு எண்களைச் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து, தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
