LATEST NEWS
“EMI யார் கட்டுறது..?” கார் போனட்டில் மனைவியின் பாதம் பதித்த கணவன்… நெட்டிசன்களிடையே வெடித்த அனல் பறக்கும் விவாதம்.. வைரல் வீடியோ..!!
புதிய கார் வாங்கும் போது ஒவ்வொருவரும் அதைத் தங்கள் பாணியில் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், சமூக வலைத்தளமான X-இல் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் தன் மனைவியைத் தூக்கிக்கொண்டு வந்து, சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மனைவியின் பாதங்களைச் புது காரின் போனட் மீது பதித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். புதுப்பெண் வீட்டிற்குள் நுழையும் ‘கிருஹ பிரவேசம்’ சடங்கைப் போல, மனைவியின் வருகை தங்கள் வாழ்வின் அதிர்ஷ்டம் மற்றும் சுப தொடக்கம் என்பதைக் குறிக்கும் வகையில் அந்தப் கணவன் இதைச் செய்திருந்தார்.
ஆரம்பத்தில் இந்த வீடியோ பலராலும் ரசிக்கப்பட்டாலும், விரைவில் இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. சில நெட்டிசன்கள், “இந்த காரின் மாதாந்திர தவணையை அந்த மனைவி தான் செலுத்துகிறாரா?” என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். காரை வாங்குவதற்கோ அல்லது கடன் தொகையைக் கட்டுவதற்கோ அந்தப் பெண் பணம் எதுவும் கொடுக்காத வரை, அவருக்கு இப்படிப்பட்ட மரியாதை கொடுப்பது வீண் என்று கூறிப் பலர் விவாதிக்கத் தொடங்கினர்.
இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு தரப்பினர் குரல் கொடுத்தனர். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் பங்களிப்பு என்பது பணம் சம்பாதிப்பதிலோ அல்லது கடனை அடைப்பதிலோ மட்டும் முடிந்துவிடுவதில்லை என்றும், அவர்களின் உணர்வுப்பூர்வமான மற்றும் மனரீதியான ஆதரவு மிகவும் விலைமதிப்பற்றது என்றும் தெரிவித்தனர். ஒவ்வொரு விஷயத்தையும் பணத்தைக் கொண்டு மட்டுமே எடைபோடும் சிலரின் குறுகிய மனப்பான்மையைக் சுட்டிக்காட்டி, இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஒரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
