அடேயப்பா..! மின்சாரக் கொள்முதலில் திடுக்கிடும் புதிய விலை… 1யூனிட் ரூ.41.50க்கு வாங்க தமிழக அரசு முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேயப்பா..! மின்சாரக் கொள்முதலில் திடுக்கிடும் புதிய விலை… 1யூனிட் ரூ.41.50க்கு வாங்க தமிழக அரசு முடிவு..!!

Published

on

டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின்சாரத் தேவையை சமாளிப்பதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 2,100 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மின்சாரக் கொள்முதலில் ஒரு யூனிட் ரூ.41.50 என்ற விலைக்கு வாங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொள்முதலானது டிசம்பர் முதல் மே வரையிலான மாதங்களில், மின் தேவை அதிகமாக இருக்கும் உச்சநேரத்தில் (Peak hours) மட்டுமே பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்காக மேற்கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு முந்தைய கொள்முதலின் போது ஒரு யூனிட் மின்சாரம் ₹37.50-க்கு வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in