“திமுகவைச் சுத்துப்போடும் தவெக அரசு..” வரிசையாகக் கைதாகும் முன்னாள் அமைச்சர்கள்… அந்த 3 ஃபைல்களை தூசி தட்டினாரா CM விஜய்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகவைச் சுத்துப்போடும் தவெக அரசு..” வரிசையாகக் கைதாகும் முன்னாள் அமைச்சர்கள்… அந்த 3 ஃபைல்களை தூசி தட்டினாரா CM விஜய்..?!

Published

on

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கைகளும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் தொடங்கி, தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது வரை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனிதா ராதாகிருஷ்ணன் பொது மேடையில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதோடு, தவெக ஆட்சியில் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அமைச்சர் ஆனார். இந்தச் சூழலில், முதல்வர் விஜய் குறிப்பிட்ட அந்த மூன்று ஃபைல்கள் என்னென்ன என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜூலை 20 அன்று கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 4-ஆம் தேதி தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பான போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, தவெகவினர் அளித்த புகாரின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, பின்னர் அன்று இரவே விடுவிக்கப்பட்டார். செப்டம்பர் 5-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், நேற்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கைது நடவடிக்கைகள் மற்றும் சோதனைகளால், திமுக முன்னாள் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் மட்டுமே குறிவைக்கப்படுகிறார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரவலாக எழுந்துள்ளது. அதேநேரத்தில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது இதுவரை இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. மேலும், அதிமுகவிலிருந்து சிலர் விலகித் தவெகவில் இணைந்துள்ளதாகவும், இன்னும் சிலர் இணையத் தயாராக இருப்பதாகக் கூறப்படுவதாலேயே அதிமுகவை தவெக அரசு குறிவைப்பதைத் தவிர்த்து வருகிறதா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in