CRIME
ஐயோ கொடுமை.. பேனா வாங்க கடைக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த 13 வயது சிறுமி கொடூரம்.. 12 நாட்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த பயங்கரம்.. பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!
சத்தீஸ்கர் மாநிலம் பாலோத் மாவட்டத்தில் உள்ள ரஞ்சிராய் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, பயந்துபோன சிறுமி 12 நாட்களாக யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில், பின்னர் தனது தாயிடம் நடந்த உண்மையை விவரித்தார். தாயின் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் மூன்று குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 14-ஆம் தேதியன்று மூன்று இளைஞர்கள் வழியில் சென்ற சிறுமியை வலுக்கட்டாயமாகத் கடத்திச் சென்று, மிரட்டி ஒரு தனிமையான வீட்டிற்கு அழைத்துச் சென்று இந்த வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அக்டோபர் 27-ஆம் தேதியன்று காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிஎன்எஸ் (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, சம்பவத்தன்று மாலை பேனா வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி இரவு 8 மணி வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். பின்னர் இரவு 11 மணியளவில் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் சிறுமி ஒரு உறவினரின் வீட்டிற்கு மயங்கிய நிலையில் கொண்டுவரப்பட்டதாகத் தகவல் கிடைத்தது, அதைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் கடும் அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்த சிறுமி, அக்டோபர் 26-ஆம் தேதியன்று தனது தாயிடம் நடந்த அனைத்து விபரங்களையும் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.
