அம்மாடியோ.. மரண விளிம்பில் 6 வயது சிறுவன்.. அசுரவேகத்தில் வந்த ரயில்.. தண்டவாளத்தில் பாய்ந்த ‘சூப்பர் மேன்’.. அடுத்து நடந்த மிராக்கிள் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ.. மரண விளிம்பில் 6 வயது சிறுவன்.. அசுரவேகத்தில் வந்த ரயில்.. தண்டவாளத்தில் பாய்ந்த ‘சூப்பர் மேன்’.. அடுத்து நடந்த மிராக்கிள் வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தின் வாங்கனி ரயில் நிலையத்தில், கண் இமைக்கும் நேரத்தில் ஒரு ஆறு வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே தொழிலாளி மயூர் ஷெல்கேவின் அசாத்திய துணிச்சல் ஒந்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பார்வை குறைபாடுள்ள தனது தாயுடன் ரயில் நிலைய மேடையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்தச் சிறுவன், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளான். அதே நேரத்தில், அதிவேகமாக வந்த உத்யன் எக்ஸ்பிரஸ் ரயில் அந்தத் தண்டவாளத்தை நோக்கி மிக நெருக்கமாக வந்துகொண்டிருந்தது. மாற்றுத்திறனாளியான தாயால் தன் கண்முன்னே நடக்கும் விபரீதத்தை உணர்ந்தும் குழந்தையைக் காப்பாற்ற முடியாதபடி தவித்த அந்தத் திக் திக் நிமிடங்களில், தூரத்திலிருந்து இதைப் பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே, தனது உயிரைப் பணையம் வைத்துத் தண்டவாளத்தில் அதிரடியாகப் பாய்ந்து ஓடினார்.

ரயில் நிலைய மேடையில் இருந்த அனைவரும் பயத்தில் உறைந்து போய்க் கத்திக்கொண்டிருந்த வேளையில், மயூர் ஷெல்கே ரயிலின் வேகத்தையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று, தண்டவாளத்தில் கிடந்த சிறுவனைத் தூக்கி மேடையில் ஏற்றிவிட்டு, தானும் ஒரே நொடியில் மேலே பாய்ந்து உயிர் தப்பினார். அவர் மேலே ஏறிய அடுத்த இரண்டாவது வினாடியில் அந்த அதிவேக ரயில் அந்தப் பகுதியைக் கடந்து சென்றது. இந்த ஒட்டுமொத்த மிரளவைக்கும் காட்சியும் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மரணத்தின் வாயிலில் இருந்த ஒரு பச்சிளம் குழந்தையைத் தனது அசாத்திய தைரியத்தால் மீட்டெடுத்த மயூர் ஷெல்கேவிற்கு, இந்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகளும் விருதுகளும் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in